வியாழன், 18 அக்டோபர், 2012

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாகக்
கொள்வர் பழிநாணு வார்.

கலைஞர் உரை:
     பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

மு.வ உரை:
     பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:
     பழி பாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக