கவிக்கலசம்

  

மானிடம் எங்கே செல்கிறது?


மானிடமெங்கே செல்லவில்லை?
மதிமண்டலமீறாய்ச்சென்றுளது
காலனை வெல்ல வழிகிடைக்கும் -என்று
காத்திரமாக முயல்கிறது

கைக்குளடங்கிடும் கருவிகளால் -நிதம்
கண்டறி வித்தைகள் கோடிகண்டு
பொற்புறு பூமியை புதுமைகொளச்செய்து
போற்றிடு தன்மையைப் பெற்றுளது

வித்துவ வானில்ச் சிறகடித்தே நிதம்
வீறுகொள் மாட்சி படைக்கிறது
இத்தனை செய்தும் பயனென்னடா -இன்று
இத்தரை மீதில் அமைதியில்லை

விருந்துபடைத்து விருப்புடன் உண்டிட்ட
வியன்மிகு வாழ்வது விலகிவிட
அருகுளோர் பாடொன்று மறியாத வாழ்வுகள்
அவனியில் இன்றிங்கு அரங்கேற

பண்பையிழந்து பணத்தைக் குவிப்பதால்
பான்மையிழந்தோம் மானிடரே
வரும் விந்தைகளோடு மரபுகள் காத்தால்
மேன்மையுறுவோம் தோழா்களே .
                                                                             கம்பநேசன்

------------------------------------------------------
சவாலை வெற்றிகொள்

வேதனை பலதை நீ கடந்து
சாதனை செய்ய வேண்டுமென்று
போதனை பலபோ் செய்து வைத்தார்
மேதினி தன்னில் நீ உயர.

தீதுகள் வந்துன் வழி தனிலே
சோதனை செய்து பார்த்தாலும்
சூதுகள் பலதை உணக்  கீந்து
வேதனை கொள்ள வைத்தாலும்........

வையக மெல்லாம் சூழ்ந்து நின்று
மெய்யாய் உன்னை எதிர்த்தாலும்
நையும் சொல்லால் உன் நெஞ்சை
தொய்யும் வண்ணச் செய்தாலும்........

ஆயிரமாயிரம் துன்பங்கள்
அடுக்காய் உன்னை அடைந்தாலும்
வாயினும் மனத்தும் வெறுக்கின்ற
வஞ்சனை பலவும் சூழ்ந்தாலும்........

ஈட்டி முனைக்கும் அஞ்சாத
இதயம் தன்னை பெற்றுவிடு
போட்டி என்று வந்துவிட்டால்
போற்றும் வண்ணம் யெயித்துவிடு

சத்திய வழியில் நீ நடந்தால்
சவால்கள் எல்லாம் வெறும் தூசு
நித்தமும் நல்லார் துணைக் கொண்டு
நிமிர்ந்தே வெற்றி நடைபோடு

                                                                                                      கம்பநேசன்              

                                               
=========================================================================
தமிழாய் வாழ்வோம்
     தமிழால் உயர்வோம்


இயல் இசை நாடகமாய்
     இணையற்று நின்ற தமிழ்
முயல்கின்ற எங்களுக்கு
     முன்னேற்றம் தந்த தமிழ்
வயல் தந்த நெல்லைப்போல்
     வளஞ்சேர்த்து நின்ற தமிழ்
புயல் வந்து போனாலும்
     சாயாத எங்கள் தமிழ்


காதற்ற மாந்தரைப் போலே-தங்கள்
         கண்பார்வையற்ற குருடரைப்போலே
தீதுகள் செய்தவர்போலே-தினம்
     திகைத்திடும் மனதினை உடையவர் போலே
பேதையர் தங்களைப்போலே-பேசுந்
     திறனினையிழந்திட்ட ஊமையர் போலே
வேதனையுற்றிங்குழன்றோம்-தமிழ்
     வென்றி மறந்து தோல்விகள் கண்டோம்


வண்ணத்தமிழ் அதனாலே-நல்ல
     அன்பையும் பண்பையும் நாங்கள் உணர்ந்தோம்
விண்ணைத்தொடும் புகழ் கொண்டோம்-பல
     விந்தைப்புலவரைக் கண்டும் மகிழ்ந்தோம்
எண்ணிய கைப்பட வாழ்ந்தோம்-என்றும் 
     ஏற்றமும் ஊற்றமும் பெற்று மகிழ்ந்தோம்
திண்ணிய நூல்களைப்பெற்றோம்-அதில்
     தீஞ்சுவைப் பாக்களை கற்று மகிழ்ந்தோம்.


கன்னித் தமிழ் அதனாலே-கர்வம்
         கொள்ளும் நிலையினைப் பெற்றோம்
இன்பத் தமிழ் அதனாலே-இணை
     இல்லை எனும் நிலை பெற்றோம்.
துன்பமிழ்ந்துயர்வுற்றோம்-வரும்
     தீங்குகள் யாவையும் தாண்டி நடந்தே
அன்பு பகிர்ந்திடக் கற்றோம்-பிறர்
     துன்பினைப் போக்கிடும் மேன்மையுணர்ந்தோம்.


வள்ளல்கள் காட்டிய பாதை-அது
     வாழும் வழியென்று நாளுமுணர்வோம்
தெள்ளு தமிழினைக் கற்போம்-நிதம்
     தேய்வறு வாழ்க்கையத் தேடியடைவோம்
துள்ளுமிளநடையோடு-உயர்வானம்
     அருகென்று கோசங்கள் செய்வோம்.


பாடிடுவோம் நிதம் ஆடிடுவோம்-எங்கள்
     பண்டைத் கலைகளைப் போற்றிடுவோம்
கூடிடுவோம் குலவிடுவோம்-ஒன்றாய்
     வாழும் நிலையினைப் பெற்றிடுவோம்
தேடிடுவோம் செல்வஞ் சேர்த்திடுவோம்-இங்கு
     தேவருலகினை ஆக்கிடுவோம்
நாடிடுவோம் நலம் யாவுமுலகிற்கு
     நண்ணிட நன்றே வேண்டிடுவோம்


தமிழ் வாழ்வு என்று ஒருவாழ்க்கை உண்டு
         தனியாக அதற்கு ஒரு புகழும் உண்டு
திமிராக அது வாழ்ந்த வாழ்க்கை நன்று
     தின்ந்தோறும் பணிந்தாடி வாழுதின்று
புவிவாழ அது தன்னை தேய்த்ததுண்டு
     புதிராக அதன் வாழ்வு ஆகுதின்று
கதியாக தமிழ் வாழ்வைப் போற்றி வாழ்வோம்
     புதுநீதி வந்தெய்துமென்று வாழ்வோம்


                                 

                                                   கம்பநேசன்
=========================================================================

            
           நாங்கள் வாத்திமார்

நாங்கள் தான் வாத்திமார் என்று
     நாடெல்லாம் சொல்லுகுது அறிவோம்!
போங்கள் புதுப்பயிருக்கு நீர்வார்த்து
     புத்துலகு படையுமென்று அனுப்புகினம்
மாங்குயில்கள் மரக்கிளிகள் மனிதக் குஞ்சுகள்
     எல்லாமே எங்கள் மடியிலை தான் வளருகினம்
ஏங்காணும்! எங்கள் கதையைக் கொஞ்சம்
     எவரேனும் நினைத்துப் பார்த்தாரோ?

ஆணியாய் சமூகத்தின் அச்சாணியாய் நாங்கள்
     அமைந்துள்ளோம் என்ற பாராட்டு!
தோணியாய் தொத்திக் கொண்டவரைக் கரைசேர்த்து
     தொழும் தெய்வங்களாய் ஆனோம் எனச் சீராட்டு
ஏணிகளாம்! ஏற்றம் தரும் நல்கும் தெய்வங்களாம்
     இன்னும் ஏதேதோ புகழுரைகள்
நாணியும் கோணியும் நாங்கள் வாழும் வாழ்க்கை
     நமக்கல்ல - அந்த நாயகனுக்குத்தான் வெளிச்சம்!

மூன்று மணிக்கே முளித்து எழும்புவதும்
     முகங்கழுவி தேத்தண்ணி குடித்தும் - பகிஸ்கரித்தும்
ஊன்றியகை நாடியிலே உருக்குலைந்த கண்ணாடி
     உவந்து போட்டின்று பாடக் குறிப்ப்பெடுப்பதுவும்
சின்னக் கண்கள் செருகித் திறந்து கலங்கி நின்று
     சிவப்புப் பேனா கையெடுத்து ஒப்படைகள் பார்பதுவும்
என்னவென உணர்வதற்கு முன்புமணி ஏழாகும்
     எழுந்து துடித்துக் குளித்து உடையுடுத்து................

சாப்பாடு பாதி - சந்தி வரும் வரையில்
     சர்க்கரை மாவில்லை மனைவி தரும் கூப்பாடும்
எப்பாடு பட்டேனும் இன்றைக்கு என்றாலும்
     இரும்பாலே தண்டவாளம் இடித்தடிக்க முன்னாலை
செப்பமாய் போவமென காலெலும் கள்முறிய
     கட்டைச் சைக்கிள் மிதித்துளக்கி ஓடுவதும்
இப்படியே போனாலும் எங்கள் 'பெரியவர்’ தன்
     இடுக்குக் கண்திறந்து கேள்விக் குறி போடுவதும்!

நாய்படாப் பாடையா படுகிறோம் நாள்முழுக்க
     நாலிரண்டு பாடங்கள் நாடகங்கள் விளையாட்டு
பேய்க்கூச்சல் போட்டாலும் பிரம்பெடுக்க மனநடுக்கம்
     "பிளீஸ்” பண்ணி வழிந்து - பயிர்களுக்கு நீர்பாய்ச்சி
தாய்போல் காக்கின்ற நேரத்தும் கிண்டலகள்
     தரங்கெட்ட நக்கல்கள் பட்டங்கள் பலநூறு
வாய்திறக்க முடியாமல் வாத்திமார் நாங்கள் படும்
     வதக்கம் யாருணர்வார்? வாய்கூசாப் பழிசொல்வார்!

“மொட்டை என்பான் ஒருவன்” மொழுங்கன் என்பான் ஒரு சீடன்
     “மோதகம்” “தோசை” “பிலாக்காய்” “மயிர்க்கொட்டி” 
”சொட்டை” என்பான் ஒருவன் ‘சொறியன்’ எனச்சொல்வான்
     சேர்ந்து சிரித்துக் குழப்பிக் குறிவைத்துப்
பாடங்கள் பலதும் பாலர்கள் தருவதனால்
     பள்ளிக் கூடமெங்கள் பல்கலைக் கழகம் தான்
எட்டி இளைத்து ஏதென்று நாங்கள் கேட்டாலும்
     றோட்டில் ஆள்திரட்டி அவலங்கள் பலநூறும்

தட்டிக் கேட்கின்ற அதிபர்கள் சில பேரின் வீட்டில் 
     தகரவேலி புரளுகுது - ஜன்னல்கள் நொறுங்குகுது!
இட்டமுடன் நல்லவழியை நாங்கள் எடுத்துச் சொன்னால்
     எம்மவர் பலபேரின் வீட்டுவேலி எரிகிறது
பட்டி பெருக்கி பசுவளர்த்து பால்கறந்து
     பண்ணையிலே கொடுத்தாலும் பறவாயில்லை எனத் தோன்றும்
முட்டிமோத ஒருவழியறியோம் மானத்தை
     முந்தானையில் கட்டி “பெருஞ்சேவை” தொடருகின்றோம்.

வாத்திமார் நாங்களிப்ப வகுப்பிலை படிப்பிக்கோம்!
     வழிகாட்டி குழுப்பிரித்து வடிவழகு பார்க்கிறோம்
பேத்திமார் போதும் இதற்கு - எம்மில் பிழையில்லை
     பெரிய பெரிய சட்டம் எம்மை ஆளுகுது!
கூத்திமார் கூத்தடிக்க - குரங்காட்டம் ப்பேற
     குந்திக் கொண்டிருந்து நாம்பார்த்தால் அதுபோதும்1
வாத்திமார் நாங்கள் சட்டவழமை ஆகிவிட்டோம்
     வளர்ந்து வரும் கொட்டில்களில் கல்வி அரங்கேறும்!

காலமெல்லாம் கைகடிக்க கடன்பட்டுக் கடன்பட்டுக்
     கடிகளிலை கணக்குயர - வட்டி தலைக்கேற
கோல மனையாள் குறையழக்கக் குழந்தை பெற்றோர்
     குறைநீக்க முடியாமல் குதியறுந்த செருப்போட
ஏலத்தில் போனதுகள் போலை இங்கழுதோம்
     ஏனென்று வாய்திறந்தால் கோட்டப் படைகுவியும்!
ஞாலத்தில் தண்ணி இல்லாத ஊர்தேடி
     நாளை போவென்று நமக்குக் கடிதம் வரும்!

பயிரை வளர்த்து பாதை காட்டுதற்கு
     பள்ளிக் கூடங்கள் பலகண்ட எங்களது
உயிரை எடுத்து ஓராயிரம் வழிகாட்டல்
     உயிர்குடித்துச் செய்யும் உபத்திரவம் பெரும் பாவம்
தாயார் குடத்தில் விழுந்து தத்தளிக்கும் ஈயானோம்
     தாளி உடைந்து தரைபுரளும் மோரானோம்
வயிறு கடிக்க வருகண்கள் நீர்சொரிந்து
     வாடுகிறோம் ஆண்டொருநாள் விழாவெடுத்து நன்றியென்பர்!

ஆசிரியர் எனவிருந்து “அதற்குள்” நுழைந்தவுடன்
     அன்றுதாம் செய்த அனைத்தையும் மறந்து விட்டு
கூசலின்றி வந்து குந்தியெல்லாம் வகுப்பிருந்து
     குறை கூறும் “ஆலோசக ஜென்மங்களை என் சொல்வோம்?
மாசுமறுவற்ற சேவைகளை பாராட்டி
     மன்குளிர வாழ்த்தி மகிழவைக்கத் தெரியாதார்
பேசும் பேச்சாலே ஆசிரிய தினவிழாவில்
     பெருமையென்ன எமக்கு எல்லாம் வெளிவேசம்!

நெருப்பாறும் கல்லாறும் நீண்ட பலவாம்
     நீராறும் கடந்து வந்தோம் எதற்கும் அஞ்சோம்!
செருப்பறுந்தும் செயினுடைந்தும் செரும் சைக்கிள்
     ரீயூப்பறுந்து போநாளில் கூட உழைத்தோம்
உருக்கெட்டும் திருக்கெட்டும் வெயிலும் மழையும்
     உவந்து பணி எம்திருப்திக் காகச் செய்தோம்!
பெருக்கத்து வேண்டும்நல்ல பணிதல் என்ற
     பெற்றி உணரார்க்கு நாமா பணிவோம்!

உயிர்கொடுத்து நாம்பணிகள் செய்யச்சீடன்
     உயர்பெறுபே றதுவெடுப்பான் எம்மை நோக்கார்
பயிர் வளர்த்தும் நாம் நின்றும் பெயிலாய் வந்தால்
     பேச்சும் வழியுமென எம்மைச் சூழும்
மயிர்வளர்த்து மண்டையிலை பயந்தான் என்ன?
     மத்தளமாய் அடியெமக்கு பேர் எவர்க்கோ!
செயிர்த்துயிர்த்துக் கேட்கின்றோம் தெருநாய் போலஎம்
     சேவைகளை ஆக்காதீர் - தர்மம் கொல்லும்!
                                                  
                                       த.நாகேஸ்வரன்  
=========================================================================
வெறுப்பு விசம்

வெறுப்பை...
கொடிய விசந்தன்னை நாகமொன்று
மிரட்டுகிற பாணியிற் படமெடுத்து
மிகச்சீறி
உமிழுவதைப் போல
உமிழ்ந்தாய் நீ என்மீது!
உனக்குப் பிடிகாத எனக்கு மிகமிகவும்
அவசிய மான ஒன்றை..
நான் செய்ததற்காய்
வெறுப்பைக் கொடிய விசமாக என்மீது
சொரிந்தாய் தொலைவிருந்து!
என்மீதாம் கோபத்தை
இன்னொரு உயிர்மீது காட்டி.. அதனைத் தண்டித்தாய்
வெறுப்பு விசம் என்மீது
துளித்துளியாய்ச் சுவறி
எரியவைத்துத் தோலை ஊடுருவித்
தசை புகுந்து
தசையை இறுகவைத்து
இதயத்தை உறையவைத்து
நொருக்கி...
கருண்டு துயின்றிருந்த கோபத்தைக்
கிளறியெனை உசுப்பிக் கிளம்ப
கட்டுப்பா(டு)
இழந்தேன்: தடம்புரண்டேன்!
நல்லபாம்பின் கொடியவிசம்
கொல்லும் ஒருகணத்தில்:
இந்த வெறுப்பு விசம்
கொல்லாமல் உயிரோடு கூறுபோடும்
என்னைநிதம்!


=========================================================================


     jkpo;j;jha; tho;j;J                 
                                          j.n[arPyd;

capNuhL vq;fs; czu;NthL Cwp
xspahfp tho;tpd; nkhopahfp
cynfd;w Nkil jdpy;ehKk; Xq;f
cue;je;J Nkd;ik topfhl;b
tapuq;fs; gha;e;J tajhYk; %j;J
tuyhw;iw MOk; jkpo;khNj!
tukhf ce;jd; kbte;j Nra;fs;
kdjhu tho;j;jp kfpo;fpd;Nwhk;!

GJikfs; Nfhb GFe;Jhiu khw;wp
Gayha; miyf;Fk; fypfhyk;
nghUs; Nghd Nghf;fpy; Gjpuhf tho;f;if
Gyk;Ngu;e;J Nkw;fpd; Rfe;NjLk;
,jDs;Sk; nrhe;j milahsk; fhj;J
,izehd; Gtpf;F vdXjp
,Wkhg;gpy; MLk; jkpNocdf;Fs;
vJ,y;iy? epd;id kdk; tho;j;Jk;.

cdjd;Gr; Nra;fs; vdkz;zpy; ehq;fs;
capu;tho;jy; xd;Nw ngUk;NgW!
cld;fl;il Vwp cidf;fhf;f ePwp
cau;e;Njhiug; Nghw;Wk; tuyhW!
cdJz;ik ahd tanjd;d? ,d;Wk;
capu;j;jha;FYq;Fk; vopNyhL!
cidneQ;rpy; itj;j Jzpthy; n[apj;J
cau;Nthk; Gtpf;Fs; kjpg;NghL!



தமிழ் அன்னை


தமிழ் அன்னைக்கு நன்றி சொல்வேன்
தமிழனாய் எனை படைத்ததற்கு!
என் அன்னைக்கு நன்றி சொல்வேன்
தமிழ் எனக்கு புகட்டியதற்கு!
என் தந்தைக்கு நன்றி சொல்வேன்
தமிழனாய் என்னை வளத்ததற்கு!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ்!




தமிழ்த் தாயே
உன் மைந்தன்
என்னை மன்னித்துவிடு
உணர்சிகளை விற்று
தன்மானம் இழந்து
தலை குனிந்து
உச்சரிப்பை மறந்து
உன்னை மறந்து
உன் பெயர் சொல்ல 
வெட்கப்பட்டு வாழும்
மனிதர்கள் மத்தியில்
தமிழர்கள் மத்தியில்
நானும் வாழ்வதற்கு
                                                                                                                                   

=========================================================================

கண்ணதாசன் தத்துவங்கள்




குற்றம் புரிந்தவனும் தனக்கு
நியாயம் கேட்கிறான்,
குற்றத்திற்கு ஆட்பட்டவனும்
நியாயம் கேட்கிறான்,
யாருக்கு அதை வழங்குவது என்பதை
"பணம்" முடிவு செய்கிறது.....
கண்ணதாசன்.

1. துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான்; தணிப்பதும் தனிமை தான்........
2. எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதை விட அதனை பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனம்
3. காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை!
4. பெண்கள் பூ போன்றவர்கள், மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது
5. கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன.
6. ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது, அதனை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.
7.சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுகிரது?
8. கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது: மீண்டும் மழை காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குத்திக்க கூடாது: அதோ; வெயில்காலம் வந்து கொண்டிருக்கின்றது.
9. உலகத்தில் தப்பு என்று சில விசயங்களைக் கருதுகிறோம். ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.
10. ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான், ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?
11. அறிமுகமில்லாதவர்கள் இருகின்ற இடத்தில், தவறான விசயங்கள் நியாயமாகி விடும்!
12. ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்... அன்பு நன்றி கருணை கொண்டவன்
11. அறிமுகமில்லாதவரகள் இருக்கின்ற இடத்தில், தவறான விசயங்கள் நியாயமாகி விடும்!
12. ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்... அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

========================================================================

எனக்கு பிடித்த சில தத்துவங்கள்


  1. ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு. ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு.  எளிதில் வெற்றி பெறலாம். விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள்அன்பு பெருகும்.
  2. நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது
  3. வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.
  4. வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!
  5. கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ
    மற்றவரை நம்புகின்றன
  6. துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
  7. நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன
  8. அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
    - ஓர் அனுபவசாலி
  9. நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
    ஒரு நல்ல நண்பனின் மவுனம்
    இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
  10. அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்காந்தியடிகள்
  11. வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே


                                                                                  
வைரமுத்துவின்

தோழிமார் கதை

ஆத்தோரம் பூத்த மரம்
ஆனை கட்டும் புங்க மரம்
புங்க மரத்தடியில் பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறு வயசுப் பெண்ணே நெனப்பிருக்கா?

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவுறுதுண்ணு
இறுக்கி முடி போட்டு எங்காத்தா கட்டி விட
பட்டுச் சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் எண்ணை வச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டும் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடை தேடி குச்சி ஐசு ஒண்ணு வாங்கி
நாந்திங்க நீ கொடுக்கு;நீ திங்க நாங் கொடுக்க
கலங்கிய ஐஸ் குச்சி கலர் கலராய்க் கண்ணீர் விட
பல்லால் கடிச்சுப் பங்கு போட்ட வேளையிலே
வீதி மண்ணில் ரெண்டு துண்டு விழுந்திடுச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூஞ்சி ஆடயிலே கால் கொலுச நீ துலைக்க
சூடு வப்பா கிழவீன்னு சொல்லி சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்கு போட்டனுப்பி
என் வீட்டில் நொக்குப் பெத்தேன் ஏண்டி நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில் போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடயிலே பருவம் திறந்து விட
என்னமோ ஏதோன்னு பதறிப் போய் நானழுக
விறு விறுன்னு கொண்டாந்து வீடு சேர்த்தே நினப்பிருக்கா?

ஆடு கனவு கண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவு கண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்

வரட்டூரு தாண்டி வாக்கப் பட்டு நான் போக
தண்ணியில்லாக் காட்டுக்கு தாலி கட்டி நீ போக
எம் புள்ள எம் புருசன் எம் புழப்பு என்னோட
உம் புள்ள உம் புருசன் உம் புழப்பு உன்னோட

நாளும் கடந்திருச்சு நரை கூட விழுந்திருச்சு
வயித்தில வளத்த கொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்த மரம் ஆனை கட்டும் புங்க மரம்

போன வருசத்து புயக் காத்தில் சாஞ்சிருச்சு!



முதல் முதலாய் அம்மவுக்கு





ஆயிரந்தான் கவிசொன்னேன் 
அழகழகாப் பொய் சொன்னேன் 
பெத்தவளே ஒம்பெரு(மை)ம 
ஒத்தவரி சொல்லலையே! 

காத்தெல்லாம் மகன்பாட்டு 
காயிதத்தில் அவன் எழுத்து 
ஊரெல்லாம் மகன் பேச்சு 
ஒங்கீர்த்தி எழுதலையே! 

எழுதவோ படிக்கவோ 
ஏலாத தாய்பத்தி 
எழுதிஎன்ன லாபமின்னு 
எழுதாமாப் போனேனோ? 

பொன்னையாத் தேவன் பெத்த 
பொன்னே! குலமகளே! 
என்னைப் புறந்தள்ள 
இடுப்புல்வலி பொறுத்தவளே! 

வைரமுத்து பிறப்பான்னு 
வயித்தில்நீ சுமந்ததில்ல 
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு 
வைரமுத்து ஆயிருச்சு 

கண்ணுகாது மூக்கோட 
கறுப்பா ஒருபிண்டம் 
இடப்பக்கம் கெடக்கையில 
என்னென்ன நெனச்சிருப்ப? 

கத்தி எடுப்பவனோ? 
களவாணப் பிறந்தவனோ? 
தரணிஆள வந்திருக்கும் 
தாசில்தார் இவந்தானோ? 

இந்த வெவரங்க 
ஏதொண்ணும் அறியாம 
நெஞ்சூட்டி வளத்தஒன்ன 
நெனச்சா அழுகவரும் 

கதகதன்னு களி(க்) கிண்டி 
களிக்குள்ள குழிவெட்டி 
கருப்பட்டி நல்லெண்ண 
கலந்து தருவாயே 

தொண்டையில் அதுஎறங்கும் 
சொகமான எளஞ்சூடு 
மண்டையில இன்னும் 
மசமன்னு நிக்கிதம்மா 

கொத்தமல்லி வறுத்துவச்சுக் 
குறுமொளகா ரெண்டுவச்சு 
சீரகமும் சிறுமொளகும் 
சேத்துவச்சு நீர்தெளிச்சு 

கும்மி அரச்சு நீ 
கொழகொழன்னு வழிக்கையிலே 
அம்மி மணக்கும் 
அடுத்ததெரு மணமணக்கும் 

திக்திக்கச் சமச்சாலும் 
திட்டிக்கிட்டே சமச்சாலும் 
கத்திரிக்கா நெய்வடியும் 
கருவாடு தேனொழுகும் 

கோழிக் கொழம்புமேல 
குட்டிக்குட்டியா மெதக்கும் 
தேங்காச் சில்லுக்கு 
தேகமெல்லாம் எச்சிஊறும் 

வறுமையில நாமபட்ட 
வலிதாங்க மாட்டாம(ப்) 
பேனா எடுத்தேன் 
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்! 

பாசமுள்ள வேளையில 
காசுபணம் கூடலையே! 
காசுவந்த வேலையிலே 
பாசம்வந்து சேரலையே! 

கல்யாணம் நான் செஞ்சு 
கதியத்து நிக்கையிலே 
பெத்தஅப்பன் சென்னைவந்து 
சொத்தெழுதிப் போபபின்னே 

அஞ்சாறு வருசம்உன் 
ஆசமொகம் பாக்காமப் 
பிள்ளைமனம் பித்தாச்சே 
பெத்தமனம் கல்லாச்சே 

படிப்புப் படிச்சுக்கிட்டே 
பணம் அனுப்பி வச்சமகன் 
கைவிட மாட்டான்னு 
கடைசியில நம்பலையே! 

பாசம் கண்ணீரு 
பழையகதை எல்லாமே 
வெறிச்சோடி போன 
வேதாந்த மாயிருச்சே! 

வைகையில ஊர்முழுக 
வல்லூறும் சேர்ந்தழுக 
கைப்பிடியாக் கூட்டிவந்து 
கரைசேத்து விட்டவளே! 

எனக்கொண்ணு ஆனதுன்னா 
ஒனக்குவேற பிள்ளையுண்டு 
ஒனக்கேதும் ஆனதுன்னா 
எனக்குவேற தாயிருக்கா? 


அந்தந்த வயதுகளில்..! 



இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை..
படி.. எதையும் படி... வாத்சாயனம் கூடக் காமம் அல்ல-கல்விதான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம் காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்..
சப்தங்கள் படி சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார் வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு..
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்.. கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்.. இன்னொருக் காதல் வரும்.. புன்னகை வரைப் போ புடவை தொடாதே..
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு..
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை- வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை.. முட்டையின் வெண்கரு காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது.. இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு..
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு.. இப்போதாவது உண்மை எழுது..

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி..
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக