நறுக்குகள்
திமிர்
வேலைக்காரன் மீது
பாய்ந்தார்..
நாயே!
பீட்டரை
கவனித்தாயா?
இவர் வீட்டில்
‘பீட்டர்’ என்றால்
நாய்.
’நாய் என்றால்
மனிதன்.
வேலைக்காரன் மீது
பாய்ந்தார்..
நாயே!
பீட்டரை
கவனித்தாயா?
இவர் வீட்டில்
‘பீட்டர்’ என்றால்
நாய்.
’நாய் என்றால்
மனிதன்.
மனிதன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
பசு பால் தரும்
என்கிறான்
காகம்
இவன் வடையை
எடுத்தால்
காகம்
வடையைத் திருடிற்று
என்கிறான்
இப்படியாக
மனிதன்
குப்பைத் தொட்டி
அலுவலகத்தில்
இருக்கிறவனுகு
இது குப்பைத் தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுகு
இது
அலுவலகம்
--------------------------------------------------------------------------
முல்லை
அல்லையிலே வாழ்பவளாம்
முல்லை அவளழகால் ஆடவர்க்கு
தொல்லை இல்லை எனுந்தன்னிடையை
இல்லையெனாதீந்ததனால் இல்லை என்று
சொல்வோர் இப்போ இல்லை.
வேண்டும்
எல்லோரும் சிரிக்கின்ற வாழ்வு வேண்டும்
எதிரியும் அழுகின்ற மரணம் வேண்டும்
ஒப்புமை
உலகங்கள் வெல்லப்படுகின்றன
பஸ்களில் பெண்கள்
பாபர் மசூதிகள்
இரண்டையும் இடிப்பதற்கு ஆள் உண்டு
கட்டுவதற்கு ஆள் இல்லை.
லஞ்சம்
முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி வந்தவனின் கைத்தலத்தில்
பத்துமுத்தை ிபாத்தி வைத்தான்
வந்தவழி ீபானான் முச்சூலன்
நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குஎனக்கு பிடித்திருக்கிறது sir