வரவேற்கிறோம் எமது தளிர்கள் எனும்பகுதிக்கு.இது, ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்கான களம். உங்களுக்கானது, உமது ஆக்கங்களை இங்கே சமர்ப்பிக்கலாம். உமது ஆக்கங்களை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி.
www.kambanesan@gmail.com
தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப் படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணன்
நீல வண்ணவாணன் அவன் குண்டலம் அசைய
சோலை தன்னில் கூவும் குயில் இன்னிசை ஒலிக்க
மாலை தன்னில் மாயன் அவன் பேச்சொலி சிரிக்க
சாலை தன்னில் மாலையுடன் கண்ணனவன் வந்தான்.
சி.சோபனா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உண்மையான நட்பு
உண்மையான நட்பு
கட்டியணைத்து முத்தமிட்டுக் கொள்ளவும்
காம வெறி பிடித்து உரசிக் கொள்ளவும்
அல்ல நட்பு கஸ்டப்படுகையில்
கண்ணீர் சிந்தவும் துன்பம் வரும் போது
தோள் கொடுக்கவும், தெரிந்த உன்னதமான
ஒர் உறவு நிலையே.... உள்ளமிரண்டும்
இணைந்து கொள்ளும் உண்மை நட்பு.
அ.சஞ்ஜிதா,
தரம் - 11,
மீசாலை கிழக்கு
மீசாலை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நலந்தரும் நட்பு
பூக்களைப் பறிக்கலாம் ஆனால்
நட்பு எனும் செடியில் இருந்து
பூக்களைப் பறிக்க முடியாது
அதிலிருந்து வரும் நண்பர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பூக்கள்
அவை நட்புப் பூக்கள்
எம் உடம்பில் இருக்கும் உயிர் உண்மை
ஆயினும் என்றோ ஒரு நாள் எம் உடம்பிலிருந்து பிரியும்
எம் நட்பு உண்மை
ஆனால் என்றும் பிரியாது
எமக்கு என்றும் எப்போதும்
எங்கேயும் என்றென்றும்
நலந்தருவது நட்பே
ர.கஜந்தினி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பில்
மொரட்டுவையில் கால் வைத்தேன்
முகம் மலர்ந்து வாய் விரிந்தது
முழுவதையும் சுற்றிப் பார்க்க
மூன்று நாட்கள் போதவில்லை
கண்டுபிடித்ததை கண்காட்சியில் வைத்தேன்
கண்பார்க்க விரும்பவில்லை
வாயுழைய வார்த்தை அளந்தேன்
வாயில்லா ஜீவன்கள் அதைக் கேட்க விரும்பவில்லை
ஆங்கிலத்தில் இருவார்த்தை
பாடமாக்கி ஒப்புவித்தேன்
கேட்பதற்கு யாருமில்லை
என்பது போல் தோன்றியது
800 கொமென்ஸ் வாங்கி
எதற்கும் உதவவில்லை
எத்தனையோ அதிசயங்கள்
அங்குதான் இருந்தனவே அதனால்
எத்தனையோ பேர் வந்தனர்
எத்தனையோ பேர் சென்றனர்
எங்கு பார்த்தாலும் மக்களே
என் கண்களில் தெரிந்தனர்
மூன்று நாட்களாகையால்
ஐயனே என்றேன்
முப்பது நாட்களானால்
ஐயோ என்றிருப்பேன்
காலம வாய்ப்பாடு
மத்தியானம் சாப்பாடு
மீதி நேரம் சுற்றிப் பார்க்கையில்
விதம் விதமான மரங்களைக் கண்டோம்
கண்டுகளித்தோம் திண்டு குடித்தோம்
வார்த்தையெல்லாம் சொல்லிக் களைத்தோம்
எடுபடும் வாய்ப்புக் கிடைக்குமா என்று
ஏங்கித் தவித்தோம் பயனின்றிப் போனோம்
முடிந்தது கண்காட்சி
முழுமை இன்றி திரும்பினோம் வீடு
அக் கவலை குறைய முன்
அரை நாளில் வீடு சேர்ந்தோம்
ஜெயதாரணி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாலைக்காட்சி

நீலப்பின்ணணியில்
நீங்காத நினைவுகளுடன்
நீலனுக்கு வழிவிட்டு
நீங்குகிறான் மாதவன்
சிவந்த கன்னங்களுடனும்
செந்நிற விழிகளுடனும்
சிதறிய பனித்துளிபோல்
சிதறாத எண்ணங்களுடனும்
திறந்த நீல வெளிக்குள்ளே
திண்ணிய நெஞ்சத்துடன்
திங்களுக்கு வழிவிட்டு
திரும்புகிறான ஆதவன்
மாதவனை உணர்ந்த முகில் கூட்டம்
மாற்றம் ஒன்றை செய்தது
ஆதவன் செல்ல வழிவிட்டு
ஆடியபடியே சென்றன
எங்கெங்கோ
முகில்கள் பிரிந்த செவ்வானத்தின்
முகத்தில் கண்ணீர் சொரிந்தது
மேகத்தின் பிரிவை தாங்காமல்
மெதுவாய் மாலை போட்டது
ஆதவனுக்கு விழுந்தது அம்மாலை
ஆவினம் மகிழ்ந்தன இதைக் கண்டு
ஆறுகள் சிவப்பாய் மாறின
ஆடுகள் வீடு திரும்பின
இவையாவும் அந்த நீலப்பின்ணணியில்
இறக்காத சித்திரங்களோ?
இமைப்பதைக்கூட நான் மறந்தேன்
இதை தீட்டிய ஓவியன் யார் அவனோ?
சோபனா
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்டு கொண்டேன்
கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்.
காணமுடியாமல் காய்ந்துபோயின
கண்கள்.
இறுதியில் இமைகளை
மூடிக்கொண்டு......
தேடினேன்.
ஞானம் பிறந்தது....
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்.....
தமிழ்ப்பிரியா
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை
அசைந்தாடும் மரத்திலே
அசைந்தாடும் மரத்திலே
ஆடல் பயிலும்விழுதுகள்
அன்பான அரவணைப்பில்
ஆடித்திரியும்
குஞ்சுகள்
ஆட்டிவிட்ட தொட்டிலிலே
அழகாய் தூங்கும் குழந்தைகள்
இசைத்துச் செல்லும்
வண்டிலே
இளமைகாட்டும் துடிப்புக்கள்
ஈட்டி எய்த காலத்திலே
இளைஞர்களின்
வீரங்கள்
ஊர்ந்து செல்லும்
பாம்பிலே
உமிழ்ந்திருக்கும் நஞ்சுகள்
உயர்ந்த மனிதர்
நெஞ்சிலே
உருவாகும் நற்சிந்தனைகள்
என்பர்கள் வாழ்விலே
தென்பில்லாச் சோர்வுகள்
என்றும் நிலைக்கும்
ஓவியமாய்
ஏட்டில்
எழுதிய காவியங்கள்
ஐஸ்வர்யம் நிறைந்த
இடமாக
ஐம்பூதம் அடக்கிய இயற்கைகள்
ஓராயிரம் காலமாக
பொறுமை
காத்த இயற்கைகள்
ஒரு நொடிப் பொழுதினிலே
ஓங்கியழித்த பேரலைகள்
ஒளவ்வையாரின்
அமுதவாக்கால்
இன்பமுற்ற மாணவர்கள்
விஞ்ஞான செயற்பாட்டால்
துன்பமுறப்போகிறார்கள்
ஜெயதாரணி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப் பகுதி வடிவமைத்ததற்கு நன்றிகள்
பதிலளிநீக்குஇது மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமாக உள்ளது
பதிலளிநீக்குit is so nice. please maintain it more nicely.
பதிலளிநீக்கு