நிகழ்களம்

எமது இணையத்தளத்தில் நிகழ்களம் என்ற பகுதி அன்றாட நிகழ்வுகள் குறித்து
 அல்லது குறிப்பிடத்தக்க விடயம் குறித்து கருத்துப்பகிர்வுகளை                             மேற்கொள்ள உள்ளது.
    
                          
 பெற்றோர்களே!!
                               உங்களுக்கு என் கனிவான வணக்கம்,
பிள்ளைகளை நன்நிலைப்படுத்த வேண்டும் என்ற உங்கள் விருப்பம் தவறானதல்ல. ஒவ்வொரு பெற்றோர்க்கும் இருக்கக்கூடிய, இருக்கவேண்டிய, ஒரு எண்ணந்தான். ஆனால் அந்த எண்ணம் எல்லை மீறக்கூடாது என்பது என் எண்ணம். -வேலியே பயிரை மேய்வது போல், பிள்ளைகளைக் காக்க வேண்டிய நீங்களே, கசக்கிப் பிளிவது சகிக்க முடியாத ஒரு துன்பம். இன்றய பெற்றோர்கள் தங்கள்- கனவுகளை, ஆசைகளை மெய்ப்பிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருப்பது கேலிக்கிடமானது.பொதுப்படச் சொல்கிறேன் என்று போர்க்கொடி தூக்க வேண்டாம். பெரும்பான்மை கருதியே பொதுப்படக் குறைப்பட்டேன். வேறொன்றும் இல்லை தரம்- 5  புலைமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மானவர்களை எங்கள் அபிலாசைகளால் வதக்கிப் பிளிகின்றோம் வருத்தி எடுக்கின்றோம். -இந்நிலை மாற வேண்டும் மறையவேண்டும் அது பெற்றோர்களாகிய உங்களால்த் தான் முடியும். 

                           இது நிகழ்களத்தின் பணிவான, கனிவான எதிர்பார்ப்பு. 

1 கருத்து: