--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் நன்பால்
கலந்தீமையால் திரிந்தற்று
பண்பில்லாதவன் அடைந்த பெருஞ்செல்வம் ஒருவருக்கும் பயன்படாது கெடுதல், நல்ல பால், வைத்த கலத்தின் குற்றத்தால் களிம்பேறிக் கெட்டாற் போன்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலாழ் களரின் நரிஅடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றிலே இறங்குகிறது. அப்போது அந்த யானையை முதலை ஒன்று பிடித்துக் கொள்கிறது. யானை உயிர் தப்ப முடியாமல் தவிக்கிறது. அலறுகிறது. கடைசியாக அந்த யானை ‘நாராயணா நாராயணா’ எனக் கத்துகிறது. உடனே மகாவிஷ்ணுவான நாராயணன் தோன்றி, அந்த யானையை முதலையிடம் இருந்து விடுவிக்கிறான். இதைத்தான் புராணீகர் ‘கஜேந்திர மோட்சம்’ என்று கதைப்பார்கள்.
மலை போன்ற யானையும் நீரில் கால் வைத்து விட்டால் முதலையிடம் சிக்கிவிட வேண்டியிருக்கிறது என்பதை விளக்கவும், அதுபோலவே தரையிலே பலமில்லாத முதலை தண்ணீரில் இருந்தால் யானையை இழுக்கக் கூடிய பலம் பெறுவதாகச் சொல்லப்படுவதை எடுத்துக்காட்டவும் நிகழ்ச்சித் சித்திரம் தீட்டிய புராணீக கற்பனையாளன், இறுதியில் அந்த யானையை அபயக்குரல் எழுப்ப வைத்து, அனந்த சயனனையும் அங்கே வரவழைத்து கஜேந்திர மோட்சம் என்ற கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.
தண்ணீரில் இறங்கி முதலை வாயில் காலைக் கொடுத்து, பரந்தாமனை அழைத்து பரகதி அடைந்த யானை புராணீகனுடைய யானை.
இதோ, இன்னொரு யானையை நமது வள்ளுவப் பெருந்தகையார் அறிமுகப் படுத்துகிறார், பாருங்கள்.
வேல் கொண்டு வீரன் வருகிறான். அந்த வீரனை யானை எதிர்க்கிறது. வீரனும் யானையை வெல்லத் தீரமாக போரிடுகிறான். தமிழனல்லவா, முதுகு காட்டாத மரபு அல்லவா?
நிமிர்ந்த நெஞ்சோடும் தூக்கிய வேலோடும் அவன் யானைமீது பாயும் போது, யானையும் தந்திரமாக தன் தந்தங்களை நீட்டி, அந்த வீரனின் வயிற்றைக் குத்தி அவனை மேலே தூக்கி விடுகிறது. மரண முகப்பிலே அந்த வேலேந்தி வேதனைக் குரல் எழுப்புகிறான். அதுவும் வீரத்தோடு கலந்து வரும்
குரல்தான். வீரனைக் குத்திய வேகத்திலே, அந்த வேழம் வெற்றி நடை போட்டு
ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் அங்குமிங்கும் ஓடுகிறது. அப்படி ஓடும் போது ஒரு பாறைக்குப் பக்கத்திலே தேங்கி நிற்கும் சேறு நிரம்பிய குட்டையிலே காலை வைத்து விடுகிறது. காலை எடுக்க முடியவில்லை. கனமான மிருகம் யானை அதன் கனம் பூமியை நோக்கி இறங்குகிறதே தவிர மேலெழுந்து கரையேற யானைக்கு உதவி செய்யும் அளவினதாய் இல்லை. யானை தவிக்கிறது. அப்போது ஒரு வேடிக்கை நடக்கிறது. அது என்ன வேடிக்கை?
ஒரு நரி, யானையின் நிலையைப் பார்த்து விடுகிறது. இதுதான் சமயமென்று, அந்த நரி, யானையின் மீது பாய்ந்து தன் ஆகாரத்துக்கு வழி தேடுகிறது. யானையின் உடலெங்கும் நரி, தன் பற்களாலும், நகங்களாலும் பிராண்டி இரத்தம் குடிக்கிறது. மாமிசமும் தின்கிறது. யானையோ எதிர்த்துப் போராட முடியாமல் ஏங்குகிறது. வேதனை தாங்காமல் துடிக்கிறது. சேற்றில் மட்டுமே அது அகப்படவில்லையானால், அந்த நரி ஓரே மிதியில் கூழாகி விடும். இப்போதோ நரிக்கு ஒரே வேட்டை! நாள் முழுவதும் காட்டைச் சுற்றினாலும் இது போல உணவு அதற்கு கிடைக்காது.
வீரனையே சுழற்றும் பலமுள்ள யானை, சேற்றிலே சிக்கினால் நரியிடமும் தோல்வியுறும் என்ற கருத்தை வள்ளுவர் அழகான ஓவியமாக தீட்டி காட்டியுள்ளார் குறள் மூலமாக! புராணீகன் கஜேந்திர மோட்சமொன்றை நம்பமுடியாத கற்பனையை யானையின் மூலம் சொன்னான் ஆனால் வள்ளுவனோ யானையின் வாயிலாக ஒரு அரசுக்கு வேண்டிய அறிவுரையையே தீட்டிக் காட்டியிருக்கிறார்.
எத்துணைப் படை பலம் இருந்தாலும் ஒரு சிறு பலவீனத்தின் காரணமாக அந்த அரசு, பலமற்ற எதிரிகளால் பறிக்கப்படலாம் என்பதற்காகவே வள்ளுவர் யானையின் வலிமையையும், அது சேற்றிலே செல்லாக் காசாகிவிட்ட சேதியையும், சிறு நரி ஜெயித்த விந்தையையும், தமது குளளோவியத்தில் தீட்டிக் காட்டியிருக்கிறார்.
உலகிலேயே போற்றப்படும் பெரும் மேதைகளும் வீரர்களும் கூட சிறு தவறுகளாலேயே, சிறியவர்களால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.
வேல் கொண்ட வீரனை குத்திக் கொண்ட யானை, சேற்றில் சிக்கினால் அதை நரி கூட எதிர்த்து அழித்து விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக