புதன், 3 அக்டோபர், 2012

ஒருநாள் மாலைப்பொழுதுஏரிக்கரை ஓரமாக வள்ளுவர் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்ஆழ்ந்த சிந்தனைசற்று நிற்பார்மீண்டும் நடப்பார்அவரைக் கடந்து இருவர் ஏதோ வாயாடிக்கொண்டு போயினர்.

 "யாரப்பா இந்த ஆள்எப்போது பார்த்தாலும் ஏரிக்கரைகுளக்கரைமலைப்பாறை என்று அலைந்து கொண்டேயிருக்கிறான்வானைப் பார்க்கிறான்பூமியைப் பார்க்கிறான்நெற்றியைச் சுருக்குகிறான்யார் இது?

இப்படி ஒருவன் கேட்கமற்றொருவன் ஏளனமாக விளக்கமளித்தான்வள்ளுவனாம்அதிலும் சாதாரண வள்ளுவன் இல்லையாம்திருவள்ளுவனாம்சிந்திக்கிறானாம்அறநூல் எழுதுகிறானாம் கிறுக்கன்எத்தனையோ பித்தர்களில் இவனும் ஒரு பித்தன்”.

 சிந்தனை கலைந்தது வள்ளுவப் பெரியாருக்குசெவியில் விழுந்தது அவர்கள் வாரியிறைத்த வசைமொழிஇழிமொழிஅவர்களைத் திரும்பிப் பார்த்தார்அவர்கள் வள்ளுவரை நோக்கி ஏகடியம் செய்துகொண்டே போய்விட்டனர்ஏரியோரத்தில் சிலர் கழனி வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்நிலத்தை வெட்டிக் கொண்டிருந்தனர் ஒரு பகுதியில்கழனியில் உழுது கொண்டிருந்தனர் ஒரு பகுதியில்கிண்று தோண்டிக் கொண்டிருந்தனர் மற்றொரு பகுதியில்அனைத்தையும் பார்த்த வள்ளுவருக்கு ஒரு அழகான உவமைக் குறள் கிடைத்தது.

தன்னை வெட்டியும் தோண்டியும் புண்படுத்துகிறவரையும் நிலம் பொறுத்துக் கொண்டு அவர்களையும் தன்மீதே தாங்கி நிற்கிறதல்லவாஅதைப் போலத்தான் நம்மை இகழ்ந்து பேசுகிறவர்களையும் பொறுத்துக் கொள்வது நம் தலையாய பண்பாகும்” என்று தனக்குத்தானே வள்ளுவர் சொல்லிக் கொண்டார்குறள் பிறந்துவிட்டது,    

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

அதிகாரம்-16           பொறையுடைமை            பாடல்-151

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக